தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு

வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு

வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : அக் 03, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2025 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : முன்விரோதத்தில் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

தவளக்குப்பம், சீனுவாசன் நகரை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி கலையரசி, 37. இவருக்கு சொந்தமான இடத்தை, ஒரு நபரிடம் அடமானம் வைத்தார். அந்த நபர், உரிமையாளருக்கு தெரியாமல் இடத்தை, மற்றொரு நபரிடம் விற்றுள்ளார். தொடர்ந்து, கையாறிய அந்த இடம் அரியாங்குப்பத்தை சேர்ந்த அனந்தராமன் மனைவி லாவண்யா என்பவரிடம் இருந்து, தேங்காய்த்திட்டை சேர்ந்த கணபதி, 49; என்பவர் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், கலையரசி கடந்த ஆண்டு, மே மாதம், புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடந்தார். இவ்வழக்கு தீர்ப்பு கலையரசிக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அதையறிந்த, கணபதி தனது ஆதரவாளர்களுடன், நேற்று முன்தினம் கலையரசி வீட்டிற்கு சென்று, அவரை தாக்கினர்.

தடுக்க வந்த, அவரது தந்தை முத்துகிருஷ்ணன், தாய் பாக்கியம், சகோதரர் கார்த்தி, கணவர் கருணாகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். இதில், கலையரசி உட்பட 5 பேர் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இது தொடர்பாக, கலையரசி மற்றும் கணபதி ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரில், கணபதி, 49; பிரதிப், 25; மணிகண்டன், 28; வேல்முருகன், 33; விக்னேஷ், 24, உட்பட இரு தரப்பை சேர்ந்த 14 மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us