ADDED : ஜூன் 13, 2026 05:46 AM
புதுச்சேரி: கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவிந்த சாலை, அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜான் ஆம்ப்ரோஸ், 54; கூலி தொழிலாளி. இவர், கடந்த 8 ம் தேதி வீட்டில் இருந்தபோது, கோவிந்த சாலையை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் 2 பேர், அங்கு வாய்க்கால் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பாண்டியன் என்பவரை கையால் தாக்கி கொண்டிருந்தனர்.
இதையடுத்து, ஜான் ஆம்ப்ரோஸ் அங்கு சென்று அவர்களை தடுத்து, பாண்டியனை தாக்கியது குறித்து தட்டி கேட்டார். இதனால், கோபமடைந்த மூன்று பேரும் இணைந்து, ஜான் ஆம்ப்ரோசை திட்டி, அவரையும் தாக்கினர். இதைகண்டு, பொதுமக்கள் அங்கு திரண்டதால், கார்த்திகேயன் மற்றும் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து ஜான் ஆம்ப்ரோஸ் அளித்த புகாரின் பேரில், கார்த்திகேயன் உட்பட 3 பேர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
