/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர் 3 பேர் மீது வழக்கு பதிவு
/
அனுமதியின்றி பேனர் 3 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 14, 2025 04:08 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அனுமதியின்றி பேனர் வைத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில், சாலை பகுதிகளில் பேனர்கள் வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பேனர் வைக்க அரசு தடை விதித்துள்ளதை மீறி, பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இ.சி.ஆரில், லாஸ்பேட்டை மெயின் ரோட்டில், பொதுப்பணித்துறை கோட்ட உதவி பொறியாளர் ஜெயராஜ் நேற்று முன்தினம் அவ்வழியாக ஆய்வு செய்தார். அப்போது, பொது மக்களுக்கு இடையூறாக பேனர் வைத்த, மரக்காணத்தை சேர்ந்த எட்டியான், 52, மீது, புகார் அளித்தார். லாஸ்பேட்டை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், எல்லைப்பிள்ளைச்சாவடியில் பேனர் வைத்தவர் மீது, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதே போல, மரப்பாலம் சாலையில், பேனர் வைத்தவர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர்.