தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுச்சாவடியில் தகராறு; 4 பேர் மீது வழக்கு பதிவு

 ஓட்டுச்சாவடியில் தகராறு; 4 பேர் மீது வழக்கு பதிவு

 ஓட்டுச்சாவடியில் தகராறு; 4 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 10, 2026 06:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 06:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுார் ஓட்டுச்சாவடியில் கூட்டமாக பிரசாரம் செய்தது தொடர்பாக இண்டி கூட்டணியை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. அதில், மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுார் ஓட்டுச்சாவடியின் உள்ளே பிரசாரம் செய்தது தொடர்பாக பா.ஜ., இண்டி கூட்டணி கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருக்கனுார் போலீசார் ஓட்டுச்சாவடி எதிரே கூட்டமாக தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, திருக்கனுார் போலீசார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இண்டி கூட்டணியை சேர்ந்த திருக்கனுார் அண்ணாதுரை, ராஜி, பிரகாஷ், செந்தில்வேலன் உட்பட மேலும் பலர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us