ADDED : ஆக 18, 2025 04:02 AM
புதுச்சேரி: தனியார் கம்பெனியில் மாமூல் கேட்டு மிரட்டி, கம்பெனி சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்,
அய்யங்குட்டிப்பாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 44; வில்லியனுார் கோபாலன் கடை பகுதியில் ஸ்டீல் ஷீட் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனிக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சரண், 20; கலைக்குமார், 19; மணி, 19; சுரேஷ், 19, ஆகியோர் அங்கு வேலை செய்யும் பாலசுந்தரத்திரிடம் மாமூல் கேட்டு மிரட்டினர்.
தகவலறிந்த பாலகிருஷ்ணன் கம்பெனிக்கு சென்றார். அவரிடம் மாதம் ரூ. 10 ஆயிரம் மாமூல் தர வேண்டும் என மிரட்டினர். அதற்கு அவர், தர முடியாது என, கூறவே கம்பெனிக்குள் அந்த கும்பல் நுழைந்து ஒன்றரை லட்சம் மதிப்பிலான மெஷினை சேதப்படுத்தி சென்றனர்.
பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், சரண் உட்பட வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
