/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மறியலில் ஈடுபட்ட 57 மீது வழக்கு பதிவு
/
மறியலில் ஈடுபட்ட 57 மீது வழக்கு பதிவு
ADDED : டிச 24, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுாரில் சாலை மறியலின் போது, மத்திய அமைச்சர் உருவப் பொம்மையை தீ வைத்து எரிந்த 57பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மண்ணாடிப்பட்டு தொகுதி வி.சி., கட்சி சார்பில் நேற்று முன்தினம் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சாலை மறியல் நடந்தது. அப்போது, மத்திய அமைச்சரின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதையடுத்து, திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் மறியல் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மறியலில் ஈடுபட்ட வி.சி., தொகுதி செயலாளர் சிவசங்கரன் உள்ளிட்ட 57பேர் மீது வழக்குப் பதிந்தனர்.