/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
/
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 03, 2025 11:15 PM
பாகூர் : பாகூர் அடுத்த குருவிநத்தம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் 27; பெயிண்டர். இவர், கடந்த 1ம் தேதி மாலை, இருளஞ்சந்தையை சேர்ந்த தனது நண்பர் ஜீவா என்பவருடன் திருப்பணாம்பாக்கத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
இருளன்சந்தை வாட்டர் டேங்க் அருகே வந்த போது, பைக் பெட்ரோல் இல்லாமல் நின்றதால், இருவரும், பைக்கை தள்ளி சென்றனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவர், ஸ்ரீதரை அசிங்கமாக திட்டி இங்க என்னடா பண்ற? என, கேட்டார். அதற்கு, ஸ்ரீதர் பைக்கில் பெட்ரோல் இல்லாததால் வண்டியை தள்ளி செல்கிறேன் என, கூறியுள்ளார்.
அதற்கு, பாரதி என்ன திமிரா பேசுற, கம்முனு போகனும் என்று மிரட்டி உள்ளார். அங்கிருந்த பாரதியின் நண்பர்கள் குணா, தருண் உள்ளிட்டோர், ஸ்ரீதரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த ஸ்ரீதர், பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், பாரதி, குணா, தருண், ஜீவா, கோகுல், பவித்ரன், வேல்மணி ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.