/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு
/
ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு
ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு
ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 12, 2025 07:22 AM
புதுச்சேரி; நோயாளி சென்ற ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற ஆட்டோ டிரைவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலுார் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் வேலாயுதம், 52; உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது தம்பி கனகராஜ் என்பவரை, கடலுார் அரசு மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் மூலம், நேற்று முன்தினம் நள்ளிரவு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
ஆம்புலன்ஸ் நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பு வழியாக சென்ற போது, முன்னே சென்ற ஆட்டோ டிரைவர் வழி விடாமல் சென்றார்.
அப்போது, ஆட்டோ ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது மோதியது. இதில், வேலாயுதம், ஆம்புலன்சில் வந்த உறவினர் காயமடைந்தனர்.
வேலாயுதம் புகாரின் பேரில், கிழக்கு போக்குவரத்து ஏட்டு, ஏழுமலை, கோட்டக்குப்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்லா மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.