/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாடகை இடத்தை காலி செய்யாத தம்பதி மீது வழக்கு பதிவு
/
வாடகை இடத்தை காலி செய்யாத தம்பதி மீது வழக்கு பதிவு
வாடகை இடத்தை காலி செய்யாத தம்பதி மீது வழக்கு பதிவு
வாடகை இடத்தை காலி செய்யாத தம்பதி மீது வழக்கு பதிவு
ADDED : நவ 08, 2025 01:43 AM
அரியாங்குப்பம்: வாடகை இடத்தை காலி செய்யாத தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்,73. இவரது மருமகன் கதிரவனுக்கு அரியாங்குப்பத்தில் உள்ள காலி மனையை, வேல்ராம்பட்டு முத்துராஜலு மனைவி தனலட்சுமி என்பவருக்கு கடந்த 2017ம் ஆண்டு, ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டார். இந்த ஒப்பந்தம் கடந்த 2024ல் முடிந்த நிலையில், ராமச்சந்திரன் இடத்தை காலி செய்ய கூறினார்.
ஆனால், முத்துராஜூலு, கதிரேசனின் சந்தை ஜானகிராமனுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, இடத்தை காலி செய்யாமலும், வாடகை பணம் தரவில்லை. இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார், முத்துராஜூலு, அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் மீது போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

