/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மயக்க மாத்திரை கொடுத்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
/
மயக்க மாத்திரை கொடுத்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
மயக்க மாத்திரை கொடுத்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
மயக்க மாத்திரை கொடுத்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
ADDED : நவ 27, 2024 11:19 PM
புதுச்சேரி : புதுச்சேரி, லாஸ்பேட்டை, சாமி பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அமுதா, 49. இவரது கணவர் ஜம்புலிங்கம். கடந்த ஆக., மாதம் அமுதா, ஜம்புலிங்கம் ஆகியோர் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு ரயிலில் சென்றனர்.
அப்போது அமுதா பயணம் செய்த ரயில் பெட்டியில், சென்னையை சேர்ந்த சாந்தி மீனா மற்றும் அவரது குழந்தைகள் பயணம் செய்தனர். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக சாந்தி மீனா, புதுச்சேரி வந்து அமுதா வீட்டில் தங்கினார். அப்போது சாந்தி மீனா, ரூ.1 லட்சம் அமுதாவிடம் கடன் வாங்கினார். ஆனால் பணத்தை மீண்டும் திருப்பி தரவில்லை. பின்னர் சாந்தி மீனாவிடம், பணத்தை வாங்க, அமுதா சென்னை சென்றார். அங்கு விடுதியில் தங்கிய போது, அமுதா சர்க்கரை நோய்க்கு மாத்திரை கேட்டார்.
சாந்தி மீனா கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட உடன், அமுதா மயங்கி விழுந்தார். அப்போது அமுதா கழுத்தில் இருந்த, 7 சவரன் தாலி செயினை சாந்தி மீனா பறித்துக் கொண்டார்.
மறுநாள் மயக்கம் தெளிந்து எழுந்த அமுதா, தன்னை சாந்திமீனா ஏமாற்றியதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சாந்திமீனா மற்றும் அவரது கணவர் பாரதிராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
ஏற்கனவே, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி வழக்கில், இந்த தம்பதியினர், கடந்த, 19,ம் தேதி லாஸ்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் மீது, செயின் பறிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.