தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவருக்கு கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு

மாணவருக்கு கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு

மாணவருக்கு கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு


UPDATED : ஆக 11, 2026 10:19 PM

ADDED : ஆக 11, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 10:19 PM ADDED : ஆக 11, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்லுாரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து வலைவீசி தேடி வருகின்றனர்.புதுச்சேரி கொம்பாக்கம் பேட் புதுநகரைச் சேர்ந்தவர் கபிலன் 18, தனியார் கல்லுாரி மாணவர். இவர் கடந்த 9 ம் தேதி மாலை 5.00 மணியளவில் அதே பகுதியில் உள்ள அய்யனார் கோவில் வழியாக நண்பர் யுவகிருஷ்ணன், 19; என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சரண், 19; மணிரத்தினம், 21; மதுபாலன், 19; சஞ்சீவீ ,20; ஆகியோர் முன்விரோதத்தில் கபிலனை வழிமறித்து சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

கபிலன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் சரண் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us