/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை கொல்ல முயற்சி கணவர் மீது வழக்குப் பதிவு
/
மனைவியை கொல்ல முயற்சி கணவர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஜன 25, 2024 04:13 AM
பாகூர்,: பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், 32; கொத்தனார். இவரது மனைவி வேல்விழி, 31. இவர், தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 13 மற்றும் 10 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள ஸ்ரீனிவாசன், வேலைக்கு செல்லாமல் இருந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வேல்விழி வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் இருந்த 3,700 ரூபாயை எடுத்து வைத்துக் கொண்டு இந்த பணம் எப்படி வந்தது என்று ஸ்ரீனிவாசன், வேல்விழியிடம் கேட்டார். அதற்கு என்னுடைய சேமிப்பில் இருந்து வீட்டுச் செலவுக்காக எடுத்து வைத்திருக்கிறேன் என்றார்.
அதனை நம்பாத சீனிவாசன், இது தப்பான வழியில் சம்பாதித்து வைத்திருக்கிறாயா? என, கேட்டு அவரை இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையால் தாக்கினார். கீழே விழுந்த வேல்விழியின் கழுத்தில் புடவையை சுற்றி, துாக்கு மாட்டி, கொலை செய்ய முயன்றார்.
அவரிடம் இருந்து தப்பிய வேல்விழி, அவரது தம்பி அஜித்துக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தார். பின், அஜித், வேல்விழியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிகிச்சை பெற்ற அவர், பாகூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, சீனிவாசனை தேடி வருகின்றனர்.