/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எதிர்க்கட்சித் தலைவர்,எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு
/
எதிர்க்கட்சித் தலைவர்,எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு
எதிர்க்கட்சித் தலைவர்,எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு
எதிர்க்கட்சித் தலைவர்,எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு
ADDED : மார் 10, 2024 04:12 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பந்த் போராட்டத்தில் ஈடுபட்ட, எதிர்க்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ., மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தநிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிறுமி படுகொலை சம்பவத்தில் அரசை கண்டித்தும், நீதி கேட்டும் புதுச்சேரி முழுதும் நேற்று முன்தினம் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. ராஜா தியேட்டர் சந்திப்பில், எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட, இண்டியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக அமைப்புகள், நேரு எம்.எல்.ஏ., தலைமையில் ராஜாதியேட்டர் அருகில்,கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின், அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு, நேரு வீதியில் உள்ள எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த, ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் சேது செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் மீது பெரிய கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் சிவா, நேரு எம்.எல்.ஏ., உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்,புதுச்சேரி அண்ணா சதுக்கம் அருகே அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட, 156 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசாரும்,கிருமாம்பாக்கத்தில் காங்., சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட, 75க்கும் மேற்பட்டவர்கள் மீது அப்பகுதி போலீசாரும்வழக்கு பதிந்தனர்.

