/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
/
பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 18, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சாலை சிவாஜி சிலை சென்டர் மீடியனில் அ.ம.மு.க.,வின் தலைவர்கள் வரவேற்பு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
பொதுப்பணித்துறை தேசிய நெஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர் வைத்த அ.ம.மு.க., நிர்வாகிகள் லாவண்யா, சேகர், முருகன், காமாட்சி ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.