/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர் வைத்த மூன்று பேர் மீது வழக்குப் பதிவு
/
அனுமதியின்றி பேனர் வைத்த மூன்று பேர் மீது வழக்குப் பதிவு
அனுமதியின்றி பேனர் வைத்த மூன்று பேர் மீது வழக்குப் பதிவு
அனுமதியின்றி பேனர் வைத்த மூன்று பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : பிப் 04, 2025 05:48 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று திருவள்ளுவர் சாலை, நெல்லிதோப்பு சிக்னல் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் திருமண வரவேற்பு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் அனுமதியின்றி சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர் வைத்த சிலம்பரசன் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பசுபதி, அசோக் ராஜா, பாபு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.