ADDED : ஆக 15, 2026 11:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கம்பியில் சிக்கி இரவு முழுவதும் கதறிய பூனையினை தொண்டு நிறுவனர் மீட்டு சிகிச்சை அளித்தார்.
புதுச்சேரி இளங்கோ நகரில் ஒரு மதில் சுவரைத் தாண்டிய பூனை சுவற்றில் இருந்த கம்பியில் குத்தி இரவு முழுதும் சத்தமிட்டு கொண்டிருந்தது. அப்போது காலையில் அந்தவழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து தொண்டு நிறுவன தலைவர் அசோக்ராஜ் விரைந்து வந்து கம்பியில் சிக்கியிருந்த பூனையினை மீட்டு, சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி அப்பகுதியில் விட்டு சென்றார்.
