/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்நடை கண்காட்சி: பரிசளிப்பு விழா
/
கால்நடை கண்காட்சி: பரிசளிப்பு விழா
ADDED : மார் 07, 2024 04:08 AM

திருக்கனுார்: புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை சார்பில் கால்நடை, கோழிகள் எழில் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
வாதானுார் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நடந்த விழாவிற்கு துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில், துறையின் இணை இயக்குனர் காந்திமதி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், பா.ஜ., நிர்வாகிகள் தமிழ்மணி, வீரராகவன், கலியபெருமாள், செல்வகுமார், லோகு, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதகடிப்பட்டு கால்நடை உதவி மருத்துவர் செங்கேணி நன்றி கூறினார்.
தொடர்ந்து, மண்ணாடிப்பட்டு புதுவை பாரதியார் கிராம வங்கி மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு தொழில் துவங்குவதற்காக 25 பேருக்கு தலா 40 ஆயிரம் வீதம் ரூ. 10 லட்சத்திற்கான கடனுதவியை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

