/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பல்கலை பேராசிரியர்கள் நியமனம் குறித்து சி.பி.ஐ., விசாரணை தேவை'
/
'பல்கலை பேராசிரியர்கள் நியமனம் குறித்து சி.பி.ஐ., விசாரணை தேவை'
'பல்கலை பேராசிரியர்கள் நியமனம் குறித்து சி.பி.ஐ., விசாரணை தேவை'
'பல்கலை பேராசிரியர்கள் நியமனம் குறித்து சி.பி.ஐ., விசாரணை தேவை'
ADDED : பிப் 14, 2025 04:27 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலை பேராசிரியர்கள் நியமனம் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி பல்கலை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து,தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவர் பேசியதாவது:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒன்னரை ஆண்டுகளாக துணைவேந்தரை நியமிக்காமல், மத்திய அரசு இருந்து வருகிறது. பேராசிரியர் குறைதீர் அதிகாரி, நிதிச்செயலர், பதிவாளர் நியமிக்கப்படவில்லை.
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் கல்லுாரிகள் இப்பல்கலை., கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் காலத்தோடு நடத்துவதில்லை.
தற்போது முதலாமாண்டு மாணவர்களின் மொழி பாடத்திற்கு வழங்க வேண்டிய வினாத்தாளை மாற்றி, 2ம் ஆண்டு மாணவர்களுக்கான வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது.
வினாத்தாள் திருத்துவதற்கு வெளி மாநில பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் நியமனம் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.

