/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னருடன் சி.பி.ஐ., அதிகாரிகள் சந்திப்பு; சிறப்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்
/
கவர்னருடன் சி.பி.ஐ., அதிகாரிகள் சந்திப்பு; சிறப்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்
கவர்னருடன் சி.பி.ஐ., அதிகாரிகள் சந்திப்பு; சிறப்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்
கவர்னருடன் சி.பி.ஐ., அதிகாரிகள் சந்திப்பு; சிறப்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 22, 2025 05:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னரை சந்திந்த சி.பி.ஐ., டி.ஐ.ஜி., தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், சி.பி.ஐ., வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தினர்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், அரசில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் லஞ்சம் மற்றும் மோசடி குறித்த புகார்களை, மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வு (சி.பி.ஐ.,) விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அரசு பணியை செய்ய பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியது மற்றும் பிறர் சொத்துக்களை மோசடியாக அபகரித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 65 வழக்குகள் சி.பி.ஐ.,யில் நிலுவையில் உள்ளது.
பொதுவாக சி.பி.ஐ., வழக்குகளை விசாரிக்க தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், சிறப்பு நீதிமன்றம் இல்லை. இதனால், முதன்மை நீதிமன்றம் அல்லது அல்லது தலைமை குற்றவியல் நீதிமன்றங்களில் பிற வழக்குகளுடனே விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், சி.பி.ஐ., வழக்குகள் அதிகம் தேக்கம் அடைகிறது.
அதனை தவிர்க்க, புதுச்சேரியில் சி.பி.ஐ.,க்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க கடந்த 2017ல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் என்ன காரணத்திலோ இத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சி.பி.ஐ., (லஞ்ச ஒழிப்பு பிரிவு) டி.ஐ.ஜி., முருகன் தலைமையில் சி.பி.ஐ., மூத்த அரசு வழக்கறிஞர் டோமினிக் விஜய், உதவி சட்ட ஆலோசகர் நடராஜன் ஆகியோர் நேற்று ராஜ்நிவாசில், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்தனர்.
அப்போது, மாநிலத்தில் நிலுவையில் உள்ள சி.பி.ஐ., வழக்குகளை விரைந்த முடிக்க ஏதுவாக சிறப்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தினர். அதனையேற்ற கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

