/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி ரூ. 13.28 லட்சம் மோசடி
/
சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி ரூ. 13.28 லட்சம் மோசடி
சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி ரூ. 13.28 லட்சம் மோசடி
சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி ரூ. 13.28 லட்சம் மோசடி
ADDED : மார் 06, 2024 03:21 AM
புதுச்சேரி : சி.பி.ஐ., அதிகாரிகள் போல் பேசி, மிரட்டி ரூ. 13.28 லட்சம் பணத்தை அபகரித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணா கேசவ குல்கார்னி, 84; ஜிப்மரில் ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி. இவருக்கு மொபைல் போனில் வீடியோ கால் வந்தது. அதில் பேசிய நபர் சி.பி.ஐ., அதிகாரி என தன்னை அறிமுப்படுத்தி கொண்டார். உங்கள் விலாசத்திற்கு வந்த பார்சலில், போதை பொருள் உள்ளது. அதனால், உங்கள், பாஸ்போர்ட், வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை சோதனை செய்ய வேண்டும். இல்லை எனில் உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும் என, பேசினார்.
இதனால் அச்சமடைந்த அவர், அந்த நபர் கேட்ட 13.28 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக அனுப்பினார். அதன் பிறது விசாரித்தபோது அவர், போலியான நபர் என, தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

