/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் வீட்டில் சி.பி.ஐ., 'ரெய்டு'

ADDED : அக் 16, 2024 05:31 AM

வில்லியனுார், : வில்லியனுாரில் மோகித் கன்ஸ்ட்ரஷன் என்ற கட்டுமான நிறுவனம், வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ., சோதனை நடந்தது.
வில்லியனுார், தில்லை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார்; வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர். இவரது மனைவி, மோகித் கன்ஸ்ட்ரஷன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரவிக்குமார் மீது சென்னை சி.பி.ஐ.,க்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் சென்றது. அதன்பேரில், சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று பிற்பகல் ரவிக்குமார் வீட்டிற்கு இரண்டு கார்களில் வந்தனர். வில்லியனுார் பைபாசில் இயங்கி வரும் மோகித் கன்ஸ்ட்ரஷன் நிறுவன அலுவலத்தில் சோதனை நடத்தினர்.
பிறகு அவரது வீடு, சகோதரர் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் ஆவணங்களோ, பணமோ சிக்கவில்லை.
அதனை தொடர்ந்து சி.பி.ஐ., அதிகாரிகள் எந்தவித ஆவணமும் எடுத்து செல்லவில்லை என, ரவிக்குமாரின் சகோதரரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். இந்த சோதனை நள்ளிரவு 12:20 மணி வரை நடந்தது. ரவிக்குமார், அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் ஆவார்.