/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டணம் செலுத்த நிதி துறை அனுமதி பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல்
/
சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டணம் செலுத்த நிதி துறை அனுமதி பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல்
சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டணம் செலுத்த நிதி துறை அனுமதி பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல்
சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டணம் செலுத்த நிதி துறை அனுமதி பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல்
ADDED : செப் 29, 2024 05:54 AM
புதுச்சேரி: சி.பி.எஸ்.இ., பொது தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக் கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்த நிதி துறை அனுமதி தந்துள்ளது என்று கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தெரிவித்தார்.
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு 10வது, பிளஸ் 2 வகுப்புகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுவரை தமிழக அரசு பாடத்திட்டத்தில் எழுதி வந்தனர்.
இக்கல்வியாண்டு முழுமையாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு புதுச்சேரி அரசு பள்ளிகள் மாறியுள்ளன. இந்நிலையில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டணம் தொடர்பாக மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர் சுகுமாரன், கவர்னர், முதல்வருக்கு கடந்த 26ம் தேதி கோரிக்கை மனு அனுப்பினார்.
அதில் , புதுச்சேரி அரசு 10ம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ.க்கு அரசு செலுத்தும் தேர்வுக் கட்டணம் குறித்து எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் வரும் 4ம் தேதியாக உள்ளது. ரூ.2 கோடிக்கு மேல் அரசு செயலர், தலைமை செயலர் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கவர்னர், முதல்வர் இதில் தலையிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்வுக் கட்டணம் தொடர்பாக சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை கடந்த செப்டம்பர் 4ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கட்டணத் தொகையானது நடப்பு 2024-25ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து 26ம் தேதி தேர்வுக்கட்டணம் மற்றும் செலவின அனுமதிக்கு நிதித்துறை பட்ஜெட் அதிகாரி ஒப்புதல் தந்துள்ளார். மாணவர்களுக்கு சரியான நேரத்தில் தேர்வுக் கட்டணத்தை செலுத்துவோம். இது கல்வித்துறையின் பொறுப்பாகும் என, தெரிவித்துள்ளார்.