/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் அரசு கல்லுாரியில் சர்வதேச மனநல நாள் அனுசரிப்பு
/
தாகூர் அரசு கல்லுாரியில் சர்வதேச மனநல நாள் அனுசரிப்பு
தாகூர் அரசு கல்லுாரியில் சர்வதேச மனநல நாள் அனுசரிப்பு
தாகூர் அரசு கல்லுாரியில் சர்வதேச மனநல நாள் அனுசரிப்பு
ADDED : அக் 26, 2024 05:59 AM

புதுச்சேரி: புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உளவியல் துறையும், இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பு மையத்தின் மனநலத் துறை மற்றும் புதுவை மாநில மனநல திட்டமும் இணைந்து நடத்திய சர்வதேச மனநல நாள் கல்லூரி வளாகத்தில் அனுசரிக்கபட்டது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமையேற்று, மனநலனின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்களின் பங்களிப்பு குறித்தும் உறையாற்றினார்.
உளநல சிகிச்சை துறையின் தலைவர் பாலன்பொன்மணிஸ்டீபன் இன்றைய சூழலில் இளைஞகளின் மனநலம் என்ற தலைப்பில் மாணவர்களிடையே கல்வி சூழலால் எற்படும் மனநிலை குறித்தும் குடி மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாவதின் விளைவுகள் குறித்தும் வாழ்வியல் முறைகளினால் ஏற்படக்கூடிய மனஅழுத்தம் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் ராமபிரபு வரவேற்றார். முடிவில் ரோஸ்லின் பிரபா நன்றி கூறினார்.