ADDED : மார் 19, 2024 05:17 AM

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி மகளிர் நுகர்வோர் அமைப்பு, குடிமைப்பொருள் வழங்கல் துறை, மதர் தெரேசா செவிலியர் கல்லுாரி சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது.
மதர் தெரேசா செவிலியர் கல்லுாரியில் நடந்த விழாவில், நுகர்வோர் அமைப்பு தலைவி திலகவதி வரவேற்றார்.
நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துரங்கம் தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் தயாளன் முன்னிலை வகித்தார்.
நுகர்வோர் குறை தீர்வு ஆணைய தலைவர் முத்துவேல், குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி, இந்தியன் ஆயில் காஸ் நிறுவன உதவி மேலாளர் குண்ட சம்பத்குமார் ரெட்டி, இந்திரா இண்டேன் நிறுவனம் பரசுராமன், சேஷாச்சலம், எடை மற்றும் நிறுத்தல் அளவை துறை துணை கட்டுப்பாட்டு அதிகாரி விபிஷ், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சதிஷ்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினர். சங்க செயலாளர் லாவண்யா நன்றி கூறினார்.
