/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாய் கட்சியில் 'சீட்' கிடைக்காததால் என்.ஆர்.காங்.,கிற்கு தாவிய பிரமுகர்கள் புதுச்சேரியில் அடுத்தடுத்து பரபரப்பு

ADDED : மார் 23, 2026 05:20 AM
புதுச்சேரி: தாய் கட்சியில் 'சீட்' கிடைக்காததால், அ.தி.மு.க., மற்றும் காங்., கட்சி சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து என்.ஆர்.காங்.,கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணியில் அ.தி.மு.க., உப்பளம், உருளையன்பேட்டை தொகுதிகளில் போட்டியிடுகிறது. முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்படவில்லை.இதனால் சீட்டை எதிர்பார்த்து காத்திருந்த அக்கட்சியின் மாநில துணை செயலாள வையாபுரிமண்டன் கடும் அதிர்ச்சியடைந்தார்.
காங்., பிரமுகர் ஏம்பலம் தொகுதியில், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கந்தசாமி தோல்வி அடைந்தார்.
தொகுதி மக்கள் மீது அதிருப்தி அடைந்த அவர், சிறிதுகாலம் ஒதுங்கி இருந்தார். அந்த நேரத்தில், அவரது வலது கரமாக செயல்பட்டு வந்த அவரது உறவினர் மோகன்தாஸ், ஏம்பலம் தொகுதியில் களப் பணியாற்றி, தேர்தலில் போட்டியிட, மக்களிடம் ஆதரவு திரட்டி வந்தார்.
காங்., கட்சியின் மாநில செயலாளர் பதவி வகித்த மோகன்ஸ் தாஸ், தற்போது, சட்டசபை தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட சீட்டு கேட்டு வந்தார். ஆனால், கட்சி தலைமை கந்தசாமிக்கு சீட் வழங்கியதால், மோகன்தாஸ் ஏமாற்றம் அடைந்தார்.
இந்நிலையில் வையாபுரி மணிகண்டன், மோகன்தாஸ் இருவரும் தனத்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.
பின், இருவரும் தங்கள் தாய் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினரில் இருந்து ராஜினாமா செய்து விட்டு, தங்கள் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோவிலில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்தனர்.