sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஹெலிப்பேடு மைதானத்தில் தடையை மீறி நுழையும் வாகனங்களால் விபத்து அபாயம் நுழைவு வழிகளில் சிமென்ட் கட்டை எழுப்ப வேண்டும்

/

 ஹெலிப்பேடு மைதானத்தில் தடையை மீறி நுழையும் வாகனங்களால் விபத்து அபாயம் நுழைவு வழிகளில் சிமென்ட் கட்டை எழுப்ப வேண்டும்

 ஹெலிப்பேடு மைதானத்தில் தடையை மீறி நுழையும் வாகனங்களால் விபத்து அபாயம் நுழைவு வழிகளில் சிமென்ட் கட்டை எழுப்ப வேண்டும்

 ஹெலிப்பேடு மைதானத்தில் தடையை மீறி நுழையும் வாகனங்களால் விபத்து அபாயம் நுழைவு வழிகளில் சிமென்ட் கட்டை எழுப்ப வேண்டும்


ADDED : நவ 27, 2025 04:33 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் தடையை மீறி நுழையும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாக்கிங் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்திற்குள் அனைத்து வாகனங்களும் மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை செல்ல தடை செய்து, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். ெஹலிபேடு மைதானத்தின் மூன்று நுழைவு வழிகளிலும், பேரிகார்டுகளை வைத்து வாகனங்கள் உள்ளே செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், போலீசார் இல்லாத நேரங்களில் தடையை மீறி ெஹலிபேடு மைதானத்திற்குள் அத்துமீறி அசுர வேகத்தில் பைக்குகள் பறக்கின்றன.

தற்போது ெஹலிபேடு மைதானத்தில் கார்களை ஓட்டி பழகவும் செய்கின்றனர். பேரிகார்டுகளை ஓரமாக தள்ளி வைத்து விட்டு, ெஹலிபேடு மைதானம் முழுதுமாக காரை ஓட்டி பழகுகின்றனர். நேற்று புத்தம் புது நிசான் மேக்னட் கார் ஒன்று பேரிகார்டுகளையும், தடையையும் கண்டுக்கொள்ளாமல் ெஹலிபேடு மைதானத்தில் அத்துமீறி நுழைந்தது. அதில் இருந்தவர் மைதானத்தில் அசுர வேகத்தில் காரை ஓட்டி பழகினார்.

ரிவர்ஸ் கியரை போட்டவர் அப்படியே ஹெலிபேடு மைதானத்தில் இருந்த தெரு விளக்கினை ஒன்றை இடித்து சாய்த்தார். இதனை கண்டதும் வாக்கிங் சென்றவர்கள் கூச்சலிட்டபடி சிதறி ஓடினர். அங்கிருந்தவர்கள் விபத்து ஏற்படுத்தியவரை காருடன் பிடித்து லாஸ்பேட்டை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ெஹலிபேடு மைதானத்தில் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வாக்கிங் செல்கின்றனர். சிறுவர்கள் விளையாடுகின்றனர். பெற்றோர் முன்னிலையில் மழலைகள் சிறிய வண்டிகளில் நடை பயிலுகின்றனர். அவர்கள் மீது கார் மோதியிருந்தால் உயி ரிழப்புகள் நடந்து இருக்கும். நல்ல வேளையாக அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் தப்பினர்.

ஹெலிபேடு மைதானத்திற்கு நீதிபதி குடியிருப்பு எதிரே இரண்டு வழிகள், ஏர்போர்ட் எதிரே ஒரு வழி என மூன்று வழிகள் உள்ளன. இந்த மூன்று வழிகளிலும் பேரிகார்டு போட்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளது எந்த விதத்திலும் உதவவில்லை. பேரிகார்டுகளை தினமும் நகர்த்தி விட்டு அசுர வேகத்தில் வாகனங்கள் பறப்பதும், வாக்கிங் செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் சிதறி ஓடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

எனவே இனி நிரந்தர தீர்வினை பற்றி காவல் துறை, பள்ளி கல்வி துறை, பொதுப்பணித் துறை யோசிக்க வேண்டும். நீதிபதி குடியிருப்பு எதிரில் உள்ள இரண்டு நுழைவு வாயில் மற்றும் விமான நிலையம் எதிரில் உள்ள நுழைவு வாயிலில் பேரிகார்டுகளை அகற்றிவிட்டு பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லாத வகையில் ௧ மீட்டர் உயரத்திற்கு கான்கீரிட் சிமென்ட் கட்டைகள் எழுப்ப வேண்டும். அந்த வழியில் பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

ெஹலிபேடு மைதானத்தில் வாக்கிங் செல்ல மட்டுமே அனுமதி. கார் ஓட்டி பழக அனுமதி இல்லை. கார் ஓட்டி பழகுவதாக இருந்தால் மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்திற்கு தான் செல்ல வேண்டும். இது தெரியாமல் புது காரினை ெஹலிபேடு மைதானத்தில் ஓட்டி தெரு விளக்கினை சரித்த வாலிபர், லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார். அடுத்து தெரு விளக்கில் இடித்தது சம்பந்தமாக போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாய்த்து நடந்தது. ஒரு தெரு விளக்கு அமைக்க ஆள் கூலி, ஜே.சி.பி., என, மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. சரிந்த தெரு விளக்கு இன்னும் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை. நான் மீண்டும் செலவு செய்ய வேண்டும்.

எனவே இடித்த மின்கம்பத்திற்கு இழப்பீடாக 12 ஆயிரம் தர வேண்டும் என, ஒப்பந்ததாரர் கேட்டார். இறுதியாக 8 ஆயிரம் கொடுத்துவிட்டு காரினை எடுத்து சென்றார்.






      Dinamalar
      Follow us