/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு 23ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர சென்டாக் அறிவுறுத்தல்
/
எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு 23ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர சென்டாக் அறிவுறுத்தல்
எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு 23ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர சென்டாக் அறிவுறுத்தல்
எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு 23ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர சென்டாக் அறிவுறுத்தல்
ADDED : ஆக 16, 2025 03:08 AM
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கால்நடை, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி 955 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நேற்று முன்தினம் முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்திய வரைவு சீட் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆட்சேபனை பெற்ற கையோடு வரும் 18ம் தேதி காலை 10 மணி முதல் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் சென்டாக் இணைதளத்தில் நுழைந்து மாணவர் சேர்க்கைக்கான கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்டாக் அறிவித்துள்ளது. சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் வரும் 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கல்லுாரியில் அசல் சான்றிதழ்களுடன் சேர வேண்டும். கல்வி கட்டணத்தை சென்டாக்கில் ஆன்லைன் மூலம் கட்டண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் வரும் 19 ம் தேதி அனைத்து அசல் சான்றிதழ்களுடன் சென்டாக் அலுவலத்தில் ரிட்போர்ட் செய்ய வேண்டும். சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடித்த பிறகே மாணவர் சேர்க்கை கடிதம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.ஆர்.ஐ., மாணவர்களை பொருத்தவரை 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்டாக் அலுவலகத்தில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். இம்மாணவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பிறகே மாணவர் சேர்க்கை கடிதம் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை மொத்தமுள்ள 386 எம்.பி.பி.எஸ்., இடங்களில் 380 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., நிர்வாக இடங்களில் மொத்தமுள்ள 301 இடங்களில் 145 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தெலுங்கு, கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கான இடங்களும் உள்ளடக்கம். எம்.பி.பி.எஸ்., என்.ஆர்.ஐ., இடங்களை பொருத்தவரை மொத்தமுள்ள 116 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்., படிப்பினை பொருத்தவரை ஒட்டு மொத்தமாக 803 சீட்டுகள் உள்ளன. இதில் 641 இடங்கள் முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படுகின்றது.
ஒட்டுமொத்தமாக எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் 1179 இடங்கள் உள்ளன. இதில் 955 சீட்டுகள் முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படுவதாக சென்டாக் அறிவித்துள்ளது.