/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.டி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு முன்னுரிமை அளிக்க சென்டாக் அறிவுறுத்தல்
/
எம்.டி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு முன்னுரிமை அளிக்க சென்டாக் அறிவுறுத்தல்
எம்.டி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு முன்னுரிமை அளிக்க சென்டாக் அறிவுறுத்தல்
எம்.டி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு முன்னுரிமை அளிக்க சென்டாக் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 19, 2025 02:48 AM
புதுச்சேரி : முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ள சென்டாக் முன்னுரிமை வரவேற்றுள்ளது.
சென்டாக் எம்.டி.எஸ்., முதுநிலை படிப்புகளுக்கு அண்மையில் முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி இடங்கள் ஒதுக்கப்பட்டது. சீட் கிடைத்த மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்தனர். முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரியில் 8 பேர், மாகி 3, வெங்கடேஷ்வரா 3 என, மொத்தம் 14 பேர் சேர்ந்தனர்.
அடுத்து எம்.டி.எஸ்., படிப்பிற்கு 2ம் கட்ட கவுன் சிலிங் நடத்த திட்டமிட்டுள்ள சென்டாக் கல்லுாரி முன்னுரிமையை வரும் 23ம் தேதி மாலை 5:00 மணி வரை கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்ட கலந்தாய்வில் சீட் கிடைத்து சேர்த்து இருந்தாலும், சேராவிட்டாலும் 2ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் 10 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். பொது, ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், பி.டி., உள்ளிட்ட பிரிவினர் 25 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
நிர்வாக இடங்களுக்கு 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இடங்கள் என இரண்டிலும் சேர விரும்பும் புதுச்சேரி மாணவர்கள் 2 லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தினால் போதுமானது என, அறிவுறுத்தியுள்ளது.