தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சென்டாக் எம்.டி., எம்.எஸ்., மருத்துவப் படிப்பு: முதலாம் கட்ட வரைவு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு

சென்டாக் எம்.டி., எம்.எஸ்., மருத்துவப் படிப்பு: முதலாம் கட்ட வரைவு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு

சென்டாக் எம்.டி., எம்.எஸ்., மருத்துவப் படிப்பு: முதலாம் கட்ட வரைவு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு


UPDATED : நவ 12, 2026 10:56 PM

ADDED : நவ 12, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 10:56 PM ADDED : நவ 12, 2026 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எம்.டி., மற்றும் எம்.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான முதலாம் கட்ட வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி அரசு மற்றும் மேலாண்மை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான இந்த வரைவுப் பட்டியல் www.centacpuducherry.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது டேஷ்ஹோல்டு உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி ஒதுக்கீட்டு நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இப்பட்டியல் குறித்து ஏதேனும் முறையீடுகள் இருப்பின், இன்று 13ம் தேதி காலை 11 மணிக்குள் தங்கள் உள்நுழைவுப் பக்கத்தில் உள்ள கிரீவன்ஸ் பகுதியில் விருப்பத்தைப் பயன்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.

முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும். தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியான பிறகு, மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள், உரிய கட்டணம் மற்றும் ஒதுக்கீட்டு ஆணையுடன் சம்மந்தப்பட்ட கல்லுாரியின் முதல்வரை அணுகி வரும் 18 மாலை 5 மணிக்குள் சேர வேண்டும்.

இந்த வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் தற்காலிகமானது மட்டுமே என்பதால், மாணவர்கள் இதனை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று சென்டாக் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தையோ அல்லது 0413-2655570, 2655571 என்ற உதவி எண்களையோ தொடர்பு கொள்ளலாம் என, அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us