/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
/
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
ADDED : மார் 15, 2024 05:51 AM

புதுச்சேரி: மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினை நிரந்தரமாக புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும் என, அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கவர்னர் தமிழிசையை சந்தித்து அளித்த மனு:
புதுச்சேரியில் கிடைக்கும் சர்வதேச அளவிலான போதைப்பொருட்கள், எங்கிருந்து வருகின்றன என்று, போலீசார் விசாரணை செய்வதில்லை. இந்த விவகாரத்தில், அலட்சியத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரால், தமிழகத்தை சேர்ந்த முன்னார் தி.மு.க., நிர்வாகி ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பல முக்கிய அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறதா என தெரியவில்லை.
புதுச்சேரி போலீசார் போதை தடுப்பு விற்பனை மீது உரிய கவனம் செலுத்தவில்லை என்றால் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினை நிரந்தரமாக புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும். தொடர்ந்து போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கையை நீதி மன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கவர்னரிடம் மனு அளிக்கும் போது, மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

