/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி ஹெர்பல் கேர் நிறுவனத்திற்கு மத்திய கதர் ஆணையம் பாராட்டு
/
வி ஹெர்பல் கேர் நிறுவனத்திற்கு மத்திய கதர் ஆணையம் பாராட்டு
வி ஹெர்பல் கேர் நிறுவனத்திற்கு மத்திய கதர் ஆணையம் பாராட்டு
வி ஹெர்பல் கேர் நிறுவனத்திற்கு மத்திய கதர் ஆணையம் பாராட்டு
ADDED : பிப் 01, 2025 12:25 AM

கடலுார் : புதுச்சேரி வி ஹெர்பல் கேர் நிறுவனத்திற்கு மத்திய அரசின் கதர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் பாகூரில், கடலுார் சுசான்லி குழுமத்தின் அங்கமான வி ஹெர்பல் கேர் நிறுவனம் உள்ளது. இங்கு, கடந்த 25 ஆண்டுகளாக மருந்துகள் கட்டுப்பாட்டு துறையின்தர சான்றிதழ், மத்திய அரசின் ஐ.எஸ்.ஓ., சான்றிதழு பெற்று தரமான உணவுப் பொருட்கள், சித்தா, ஆயுர்வேத மருந்து, ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
ஆயுஸ் அமைப்பின் அனுமதியுடன் இயங்கும் வி ஹெர்பல் கேர் நிறுவனத்தை மத்திய அரசின் கதர் மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் தென் மண்டல இணை இயக்குனர் மதன்சர் ரெட்டி, தமிழ்நாடு புதுச்சேரி மாநில இயக்குனர் சுரேஷ், உதவி இயக்குனர் பாஸ்கர் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
இந்நிறுவன செயல்பாடுகள், மருந்துகள் கையாளும் மற்றும் விநியோகிக்கும் முறைகள் நேர்த்தியாக இருப்பதாக கூறி பாராட்டினர். வி ஹெர்பல் நிறுவன மேலாண் இயக்குனர் ரவி, இயக்குனர்கள் உஷா ரவி, பானுப்பிரியா உடனிருந்தனர்.