/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு: 179 பேர் பங்கேற்பு
/
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு: 179 பேர் பங்கேற்பு
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு: 179 பேர் பங்கேற்பு
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு: 179 பேர் பங்கேற்பு
ADDED : ஏப் 14, 2025 04:10 AM
புதுச்சேரி:புதுச்சேரியில் நேற்று நடந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வில் 179 பேர் பங்கேற்றனர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த மத்திய பாதுகாப்பு படை மற்றும் கடற்படை தேர்வு புதுச்சேரியில் இரண்டு மையங்களில் நேற்று நடந்தது.
அதன்படி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை பிரிவு தேர்வு, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9:00 முதல் 11:00 மணி வரையிலும், மதியம் 12:30 மணி முதல் 2:30 மணி வரையிலும், மாலை 4:00 முதல் 6:30 மணி வரையிலும் என 3, பிரிவாக நடந்தது. தேர்வுக்கு 112 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 48 பேர் தேர்வு எழுதினர்.
இதேபோல், தேசிய பாதுகாப்பு, கடற்படை பிரிவுக்கான தேர்வு லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரியில் காலை 10:00 முதல் 12:30 மணி வரையிலும், மதியம் 2 முதல் 4:30 மணி வரையிலும் 2 கட்டமாக நடந்தது. இத்தேர்வுக்கு 186 பேர் விண்ணப்பித்த நிலையில், 131 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 298 பேரில், 179 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
யு.பி.எஸ்.சி. ஆய்வு அதிகாரி ஜோஸ்சனா, ஜி.எஸ்.டி., இணை ஆணையர் வடிவுகரசி, உதவி ஒருங்கிணைப்பாளர் யாசம் லட்சுமி நாராயணன், அரசு சார்பு செயலர்கள் ஜெய்சங்கர், கண்ணன் ஆகியோர் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.
தேர்வு மையத்தில் ஒவ்வொரு அமர்வுக்கு தேர்வர்களின் இ-அட்மிட் கார்டு, புகைப்பட அடையாள அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டு, தேர்வறைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் வசதிக்காக பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

