/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலிதீர்த்தாள்குப்பத்தில் மழை, வெள்ளம் பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு

ADDED : டிச 10, 2024 06:36 AM

திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் ஓம்சக்தி நகரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஓம் சக்தி நகரில், பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் 8 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் 3 நாட்களாக வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தீயணைப்புத் துறையினருடன் படகில் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில், பால், பிரட் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.
இந்த நிலையில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை மத்திய மேலாண்மைத்துறை இணை செயலாளர் ராஜேஸ்குப்தா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
மண்ணாடிப்பட்டு கொம்யுன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவிப்பொறியாளர் மல்லிகார்ஷூணன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.