sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெஞ்சல் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு நாளை ஆய்வு: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பேரிடர் பகுதிகளாக அறிவிப்பு

/

பெஞ்சல் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு நாளை ஆய்வு: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பேரிடர் பகுதிகளாக அறிவிப்பு

பெஞ்சல் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு நாளை ஆய்வு: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பேரிடர் பகுதிகளாக அறிவிப்பு

பெஞ்சல் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு நாளை ஆய்வு: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பேரிடர் பகுதிகளாக அறிவிப்பு


ADDED : டிச 07, 2024 07:15 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பெஞ்சல் புயல் பாதிப்பினால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை ஆய்வு செய்ய உள்ளது.

பெஞ்சல் புயல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை புரட்டி போட்டது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. புயலால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 4,168 வீடுகள் பகுதியாகவும், 154 வீடுகள் அதிகளவிலும் மற்றும் 315 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 14,315 மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 975 படகுகள் சேதம் அடைந்தன. 500 மரங்கள் விழுந்துள்ளன. 1,596 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.

புயல், மழை சேதங்களை கணக்கெடுத்த புதுச்சேரி அரசு 600 கோடி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. புதுச்சேரிக்கு மத்திய குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் ரங்கசாமி பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதன் அடிப்படையில் தமிழகம், புதுச்சேரியில் பெஞ்சல் புயல் பாதிப்பகளை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ்குப்தா தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று இக்குழுவினர் சென்னை வந்தனர். இன்று கடலுார், கள்ளக்கறிச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து நாளை 8ம் தேதி புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

மத்திய குழு வருகையையொட்டி தலைமை செயலர் சரத் சவுகான் உத்தரவின்பேரில், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்து வருகின்றனர். மத்திய குழுவினர் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்தும் கலந்துரையாடுகின்றனர்.

பேரிடர் பகுதிகள்:


கடும் பாதிப்பினை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் இயற்கை பேரிடர் பாதித்த பிராந்தியங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கலெக்டர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ள உத்தரவில், பெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக பசலி ஆண்டான(1434) இந்தாண்டு ஜூலை 1ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. கவர்னரின் ஆணைப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது என கூறப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர் பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களின் பசலி ஆண்டு குறிப்பிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பசலி ஆண்டு என்பது, வருவாய்த் துறையால் பின்பற்றப்படும் நடைமுறை. ஜுலை மாதம் முதல் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கடைசி நாள் முடிய உள்ள வருவாய்த் துறையின் காலம் பசலி ஆண்டு ஆகும்.

விளைநிலம் குறித்த அரசு கணக்குகளில் பயன்படுத்தப்படும் நில வருவாய் ஆண்டாக பசலி உள்ளது. அதன்படி நில வரியும் வசூலிக்கப்படுகிறது. எனவே புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் இயற்கை பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நில வரியும் ரத்தாக உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரையில் வெளியாக உள்ளது.






      Dinamalar
      Follow us