/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் பட்டயப்படிப்பு படித்த மாஜி அமைச்சருக்கு சான்றிதழ்
/
வேளாண் பட்டயப்படிப்பு படித்த மாஜி அமைச்சருக்கு சான்றிதழ்
வேளாண் பட்டயப்படிப்பு படித்த மாஜி அமைச்சருக்கு சான்றிதழ்
வேளாண் பட்டயப்படிப்பு படித்த மாஜி அமைச்சருக்கு சான்றிதழ்
ADDED : ஜன 10, 2025 05:50 AM

புதுச்சேரி: வேளாண் உள்ளீடு பட்டயப்படிப்பு படித்த முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணனுக்கு துணை வேந்தர் கீதா லட்சுமி சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி முன்னாள் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், படிப்பிற்கு எதுவும் தடையில்லை அறிவையும் ஆற்றலையும் வளர்த்து கொள்வது, ஒரு வகையான கலை என்பதை நிருபித்தார்.
அவர், வேளாண் துறை மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக, கோயம்புத்துார் வேளாண் பல்கலைகழகம் சார்பில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கொடுக்கப்படும் தொலைதுார கல்வியின் வாயிலாக வேளாண் உள்ளீடு பட்டயப் படிப்பில் சேர்ந்து அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதற்கான சான்றிதழை கோயம்புத்துார் வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் கீதா லட்சுமி அவருக்கு வழங்கினார்.