அசிஸ்டெண்ட் பணிக்கு 14ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
அசிஸ்டெண்ட் பணிக்கு 14ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
ADDED : ஜூலை 10, 2026 01:31 AM
புதுச்சேரி: அசிஸ்டெண்ட் பணிக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வரும் 14ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு அசிஸ்டெண்ட் பதவிக்காக போட்டித் தேர்வு நடந்து, முடிவுகள் வெளியாகின. அதில் தேர்ச்சி பெற்ற சிலர் அப்பதவிகளில் சேரவில்லை. காலியாக உள்ள பணியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. புதுச்சேரி தலைமை செயலகம், மூன்றாவது மாடியில் உள்ள நிர்வாக சீர்திருத்தத் துறை தேர்வு பிரிவில் நடக்கும் சரிபார்ப்பில், தேர்வர்கள் அசல் சான்றுகளுடன் வர அறிவுSத்தப்பட்டுள்ளனர்.
ஆர்ட்டிஸ்ட் பணிக்கு திறன் தேர்வு கடந்த மாதம் 28 ம் தேதி ஆர்ட்டிஸ்ட் பணிக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் தகுதி தேர்வு நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு வரும் 12ம் தேதி திறன் தேர்வு நடக்கிறது. அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைகூடத்தில், காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி வரை என இருபிரிவாக நடக்கிறது.
இத்தகவலை சார்பு செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
