போலீஸ் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 18ம் தேதி துவக்கம்
போலீஸ் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 18ம் தேதி துவக்கம்
ADDED : பிப் 13, 2026 05:52 AM
புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் காலி கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடற்தகுதி தேர்வு கடந்த ஜனவரி 2 முதல் 12ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, எழுத்துத் தேர்வு கடந்த 8ம் தேதி புதுச் சேரி தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் 1 0ம் தேதி வெளியிடப்பட்டது.
தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கோரிமேடு, காவலர் பயிற்சி பள்ளி கான்பரன்ஸ் ஹாலில் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 8:30 மணிக்கு நடக்கிறது. மேலும், விவரங்கள் காவல்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://police.py.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட அனைவரும், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள 'சான்றளிப்பு படிவத்தை' பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, நாளை 14ம் தேதி மாலை 5:30 மணிக்குள், புதுச்சேரி, போலீஸ் தலைமையகம், காரைக்கால் சீனியர் எஸ்.பி., அலுவலகம், மாகே மற்றும் ஏனாம் எஸ்.பி., அலுவ லங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
