/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்
/
ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்
ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்
ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்
ADDED : செப் 23, 2024 04:41 AM
புதுச்சேரி, : புதிதாக தேர்வான 140 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 8ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காரைக்கால், மாகி தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வான 140 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் உரிய அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், சான்றிதழ்களை சமர்பிக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும். அசல் சான்றிதழ் சமர்ப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.