/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிகளில் நாற்காலிகள் சீரமைப்பு
/
அரசு பள்ளிகளில் நாற்காலிகள் சீரமைப்பு
ADDED : டிச 16, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரசு பள்ளிகளில் பழுதடைந்த மேசை, நாற்காலிகள் சீரமைக்கும் பணியை தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் கோபால் துவக்கி வைத்தார்.
உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள திருவள்ளுவர் மற்றும் திரு.வி.க அரசு பள்ளிகளில் பழுதடைந்துள்ள மேசை, நாற்காலிகளை தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் தனது செலவில் சீரமைத்து தருவதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, மேசை, நாற்காலிகளை சீரமைக்கும் பணியை தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
தொகுதி செயலாளர் சக்திவேல், தொண்டரணி அமைப்பாளர் வீரன், கலை இலக்கிய பேரவை ஸ்ரீதர், இளைஞரணி ரெமி எட்வின், பொறியாளர் அணி அர்ஜுன், தொண்டரணி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

