/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சலானி ஜூவல்லரியின் தங்க, வைர நகை கண்காட்சி துவக்கம்
/
புதுச்சேரியில் சலானி ஜூவல்லரியின் தங்க, வைர நகை கண்காட்சி துவக்கம்
புதுச்சேரியில் சலானி ஜூவல்லரியின் தங்க, வைர நகை கண்காட்சி துவக்கம்
புதுச்சேரியில் சலானி ஜூவல்லரியின் தங்க, வைர நகை கண்காட்சி துவக்கம்
ADDED : பிப் 17, 2024 06:25 AM

புதுச்சேரி: சலானி ஜூவல்லரியின் தங்க, வைர நகைகளின் மூன்று நாள் கண்காட்சி, புதுச்சேரி ஓட்டல் ரெசிடன்சியில் நேற்று துவங்கியது.
உரிமையாளர் ஸ்ரீபால் துவக்கி வைத்து அனைவரையும், வரவேற்றார். சென்னை மற்றும் மதுரையில் இயங்கி வரும் சலானி ஜூவல்லரியின் தங்க மற்றும் வைர நகை கண்காட்சி நேற்று துவங்கி நாளை (18ம் தேதி) வரை மூன்று நாட்கள், புதுச்சேரி அண்ணா சாலை ஓட்டல் ரெசிடென்சியில் நடக்கும் இக்கண்காட்சி காலை 10:00 மணிக்கு துவங்கி இரவு 8:00 மணி வரை நடக்கிறது.
இதில், மணமகள் திருமண நகைகள், தங்கம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட லைட் வெயிட் நகைகள், பழங்கால தொன்மையுடன் பாரம்பரியத்தை உணர்த்தும் ஆன்டிக் நகைகள், தெய்வீகமான கோவில் நகைகள் என பல வகையான நகைகளும், வெள்ளி பாத்திரங்கள், விளக்குகள், வெள்ளி அலங்கார பொருட்கள், வெள்ளியில் செய்யப்பட்ட இருக்கை, தொலைபேசி, விநாயகர் சிலை, பூஜை செட்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என உரிமையாளர் தெரிவித்தார்.
இக்கண்காட்சிக்கு வருகை தந்த வாடிக்கையாளர்களுக்கு , மேலாளர் விஷ்வநாத், துணை மேலாளர் ஆப்ரகான் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.