/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொகுதி மேம்பாட்டு நிதியில் வருகிறது மாற்றம்: புதிய பணிகளை மேற்கொள்ள பரிந்துரை
/
தொகுதி மேம்பாட்டு நிதியில் வருகிறது மாற்றம்: புதிய பணிகளை மேற்கொள்ள பரிந்துரை
தொகுதி மேம்பாட்டு நிதியில் வருகிறது மாற்றம்: புதிய பணிகளை மேற்கொள்ள பரிந்துரை
தொகுதி மேம்பாட்டு நிதியில் வருகிறது மாற்றம்: புதிய பணிகளை மேற்கொள்ள பரிந்துரை
ADDED : ஏப் 10, 2025 04:24 AM

புதுச்சேரி: தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.எல்.ஏ.,க்கள் வேகமாக செலவிடும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்ய மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது.
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தொகுதி மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், மாநில அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகளை கண்டறிந்து, அதை தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்திட பரிந்துரை செய்து, நிதி ஒதுக்கீடு செய்வர்.
ரூ. 3 கோடியாக உயர்வு
தொகுதி மேம்பாட்டு நிதியாக, முன்பு, எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது. இது என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் 2 கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 கோடியாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்த சூழ்நிலையில், இந்த நிதியை செலவிடுவதில் பல்வேறு மாற்றங்களை புகுந்த மதிப்பீட்டு குழு முடிவு செய்து, இதற்கான பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்
ஆனால் எம்.எல்.ஏ.,க் கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தெரு விளக்கு அமைக்க வழிமுறை இல்லை. வேறு வழியின்றி எம்.பி.,களின் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.எல்.ஏ.,க்கள் பெற்று தெரு விளக்கு, ைஹமாஸ் விளக்கு போட வேண்டியது உள்ளது.
தற்போது, தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் ைஹமாஸ், மினிமாஸ், தெரு விளக்குகள் போட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இன்றைக்கு அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமிரா போட சொல்லி எம்.எல்.ஏ.,க்களை பொதுமக்கள் நாடி வருகின்றனர்.
எனவே காலத்துகேற்ப விதிமுறைகளில் மாற்றம் செய்து எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கண்காணிப்பு கேமிரா அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அந்தந்த பகுதிகளில் இளைஞர்களுக்கு ஜிம் அமைத்து தரவும் விதிமுறைகளில் மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் தரம் உயரும்போது கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும். ஆனால் எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் இருந்து வகுப்பறைகளை கட்டிக்கொடுக்க வாய்ப்பில்லை.
புதிய பரிந்துரையில் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகளை எம்.எல்.ஏக்கள் மேம்பாட்டு நிதியில் இருந்தே செய்து கொடுக்க முடியும். இதேபோல் தொகுதி எம்.எல்.ஏக்கள் மேம்பாட்டு நிதி மானியமாக தான் செலவிடப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு பணிக்கும் உள்ளாட்சி துறை, நிதி துறைக்கு கோப்புகள் சுற்றி சுற்றி வருகிறது.
இதன் காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது. எனவே அமைச்சரவை கவுன்சில் அனுமதியுடன் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் அரசாணையாக வெளியாகும்போது பணிகள் வேகமெடுக்கும்.