ADDED : மே 21, 2026 06:35 AM

வில்லியனுார்: பெரம்பை ஏழை மாரியம்மன் ஆலய தேர் திருவிழா நேற்று நடந்தது.
வில்லியனுார் அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை கிராமத்தில் உள்ள ஏழை மாரியம்மன் ஆலய பிரமோற்சவ நான்காம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 18 ம் தேதி துவங்கியது. அன்று மாலை 3:00 மணியளவில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும் இரவு சாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. 19ம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், மதியம் சாகை வார்த்தல், மாலையில் செடல் உற்சவமும் நடந்தது.
முக்கிய விழாவாக நேற்று(20ம் தேதி) தேர்த்திருவிழா நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல் கிராம மக்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் பெரம்பை மற்றும் சுற்றுவட்டரா பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தன் நிலையை வந்தடைந்தது. தேர்திருவிழாவை முன்னிட்டு கிராமத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் பக்தர்களுக்கு வழங்கினர்.
இன்று மாலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. நாளை(22ம் தேதி) மாலை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டினை பெரம்பை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
