/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடுக்குமாடி குடியிருப்பை மக்களுக்கு வழங்காவிட்டால் போராட்டம் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பு

ADDED : நவ 21, 2025 05:53 AM

புதுச்சேரி: அடுக்குமாடி குடியிருப்பை, உரியவர்களுக்கு வழங்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என, சமூக சேவகர் சார்லஸ் மார்ட்டின், கூறினார்.
புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வராமல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை, சமூக சேவகர் சார்லஸ் மார்ட்டின் நேற்று பார்வையிட்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அவர், கூறியதாவது;
அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, 214 பேருக்கு கொடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்டி ஓராண்டு ஆகியும் பயனாளிகளுக்கு கொடுக்கவில்லை. இக்குடியிருப்புக்காக 50 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது. இங்கு குடியிருந்த மக்கள் வெளியில் வாடகை வீட்டிற்கு சென்று கஷ்டப்பட்டு வருகின்றனர்.
கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பு மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை எனில், கட்டடம் சேதமாகி, மீண்டும் அதற்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.இலங்கை சிறையில் இருந்த காரைக்கால் மீனவர்களுக்கு எங்கள் மன்றம் சார்பில், வழக்கறிஞர்கள் மூலம், பல்வேறு உதவிகள் செய்துள்ளோம்.
பொதுமக்களுக்கு எங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்து வருகிறோம். மக்களின் பிரச்னைகளை நேரடியாக சென்று சந்தித்து கேட்டு வருகிறோம்.
கட்சி துவங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகும்.
அடுக்கு மாடி குடியிருப்பை உரியவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லைஎன்றால், அடுத்த கட்டமாக, உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.