தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : ஆக 30, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கொடாத்துார், முட்ராம்பட்டு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.

திருக்கனுார் அடுத்த கொடாத்துார், முட்ராம்பட்டு கிராமங்களின் மத்தியில் செங்கழுநீர் மாரியம்மன், விநாயகர், முருகர், ஈஸ்வரன், காளிகாம்பாள், ஐயனார் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவில்கள் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிேஷக விழா கடந்த 28 ம் தேதி துவங்கியது.

இதையொட்டி, அன்று காலை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, தன பூஜை, மாலை அனுக்கை விக்னேஸ்வர பூஜை, மிருத்ஸங்கிரஹணம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

முக்கிய நிகழ்வாக நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, கோவில் விமானம் மற்றும் செங்கழுநீர் மாரியம்மன் மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நடந்தது.

அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் சிறப்பு மின் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us