/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை இல்லை புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
/
கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை இல்லை புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை இல்லை புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை இல்லை புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : மார் 07, 2024 04:08 AM
புதுச்சேரி : கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்காததை கண்டித்த ஐகோர்ட் நீதிபதிகள் ஒரு வாரத்திற்குள் பதிலளித்த உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்தன. அதை நலத் துறை சார்பில்,கடந்த 09.09.2020ம் தேதி, ஒப்பந்த அடிப்படையில் முதற்கட்டமாக 69 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் பிறகு இரண்டாவது பேட்ஜ் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 263 செவிலியர்கள்90 நாட்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு அடிப்படையில் பணி அமர்த்தபட்டனர்.
இவர்கள் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனை, ராஜிவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த சூழ்நிலையில் கடந்த 04.07 2023ம் தேதி பணியிலிருந்து அனைவரும் நீக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து கவர்னர், முதல்வர், தலைமை செயலர், சுகாதார இயக்குனரை சந்தித்து மீண்டும் வேலை கேட்டனர்.
எந்தவித தீர்வும் கிடைக்காத நிலையில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நீதிமன்றத்தில் கடந்த 06.11.2023ல் வழக்கு தொடர்ந்தனர்.21.11.2023ல் வழக்கினை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், செவிலியர் பணியில் முன்னுரிமை வழங்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து மூன்று மாதம் வரை கால நீட்டிப்பு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அளித்தது.
ஆனாலும் செவிலியர் பணியிட தேர்வில் கொரோனா காலத்தில் பணி புரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் புதிய செவிலியர்களை பணிக்கு அமர்த்தி, அண்மையில் பணியாணை வழங்கப்பட்டது.
இதனையடுத்து கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் 28.02.2024ல் சென்னை ஐகோர்ட்டினை அணுகினர். மத்திய நிர்வாக தீர்ப்பாயம்ஆணையை கடைப்பிடிக்கவில்லை. அறிவிப்பில் முன்னுரிமை தரவில்லை என்று கோர்ட் அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தனர்.
இவ்வழக்கு ஐகோர்ட் நீதிபதிகள் சுரேஷ்குமார் - குமரேஷ்பாபுஅமர்வு முன்னிலையில் கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பு அளித்தார்.
செவிலியர் பணி தேர்வில் அறிவிப்பில் கொரோனா காலத்தில் எந்தவித முன்னுரிமையையும் அளிக்காததை கண்டித்த நீதிபதிகள், சுகாதாரத் துறை இயக்குனர், தலைமை செயலர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வரும் 11ம் தேதிக்கு வழக்கினை தள்ளி வைத்தனர். இந்த தீர்ப்புதற்போது ஐகோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

