/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத்துறை இயக்குனராக செவ்வேள் நியமனம்
/
சுகாதாரத்துறை இயக்குனராக செவ்வேள் நியமனம்
ADDED : ஜூலை 09, 2025 08:42 AM

புதுச்சேரி : சுகாதாரத்துறை இயக்குனராக செவ்வேள் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் சுகாதாரத்துறை இயக்குனராக நேற்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ளார்.
சுகாதாரத்துறை இயக்குனராக இருந்த ரவிச்சந்திரன் நிர்வாகப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை ரேடியோலஜி பிரிவு துறை தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோன்று உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமி முனிஸா பேகம் பொது சுகாதார துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரியாக ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரியாக குணேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளனர்.