தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 7,244 சுவர் விளம்பரங்கள் அகற்றம் :தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

 7,244 சுவர் விளம்பரங்கள் அகற்றம் :தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

 7,244 சுவர் விளம்பரங்கள் அகற்றம் :தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


ADDED : மார் 24, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது மற்றும் தனியார் சொத்துக்களில் 7,244 இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அற்றப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

புதுச்சேரியில் வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நடத்தை விதிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டசபை தொகுதிகளிலும் அமலில் உள்ளது.

அனுமதியில்லாத அரசியல் விளம்பரங்களை அகற்றுவதற்கான விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, அனைத்து தொகுதிகளிலும் பொது மற்றும் தனியார் சொத்துக்களில் அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரியில் 6,795, மாகி-185, ஏனாம்-264 இடங்கள் என ஒட்டுமொத்தமாக 7,244 இடங்களில் அகற்றப்பட்டுள்ளன. காரைக்காலில் 3,402 இடங்களில் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us