/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழைநீர் வெளியேற்றும் பணி தலைமை பொறியாளர் ஆய்வு
/
மழைநீர் வெளியேற்றும் பணி தலைமை பொறியாளர் ஆய்வு
ADDED : டிச 01, 2024 05:36 AM

புதுச்சேரி,: பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி நகரப் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டை, இடையஞ்சாவடி பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் நகரப்பகுதியான கிருஷ்ண நகர், ரெயின்போ நகர் பகுதியில் சூழ்ந்து அப்பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் நிலை இருந்து வந்தது.
இந்த பிரச்னைக்கு தீர்வாக இ.சி.ஆரில் உள்ள பெரிய வாய்க்காலில் மின் மோட்டார்கள் அமைத்து தண்ணீரை கொக்கு பார்க் சந்திப்பில் உள்ள பெரிய வாய்க்காலில் விட பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதேபோன்று பல்வேறு பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

