தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த முதல்வர் தலைமையில் ஆலோசனை

வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த முதல்வர் தலைமையில் ஆலோசனை

வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த முதல்வர் தலைமையில் ஆலோசனை


UPDATED : நவ 10, 2026 11:53 PM

ADDED : நவ 10, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 11:53 PM ADDED : நவ 10, 2026 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியின் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம், சட்டசபை வளாகத்தில் நடந்தது.

அமைச்சல் மல்லாடி கிருஷ்ணாராவ், பொதுப்பணித்துறை செயலாளர் முத்தம்மா, தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுச்சேரியில் உள்கட்டமைப்பு மேம்பாடு, நகரை அழகுபடுத்துதல், நிலத்தடி வடிகால் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் பொதுமக்களுக்குச் சீரான குடிநீர் வினியோகம் செய்வது உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விரைவில் முறையாக பெற்று உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

சுற்றுலாத்துறையின் மூலம் புதுச்சேரி நகரை மேலும் அழகுபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக நகரின் முக்கியச் சாலைகளில் அலங்கார மின் விளக்குகள் அமைத்தல், சாலைகளின் மையப் பகுதிகளில் சென்டர் மீடியன் உள்ளிட்ட பல்வேறு அழகுபடுத்தும் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களிலும் நிலத்தடி வடிகால் அமைப்பை தொடர்பாகவும், நிலத்தடி வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us