குத்துச்சண்டை போட்டியில் வென்ற புதுச்சேரி வீரருக்கு முதல்வர் பாராட்டு
குத்துச்சண்டை போட்டியில் வென்ற புதுச்சேரி வீரருக்கு முதல்வர் பாராட்டு
ADDED : செப் 04, 2026 07:33 PM
புதுச்சேரி: பஞ்சாப்பில் தேசிய அளவிலான சப் ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற புதுச்சேரி வீரருக்கு முதல்வர் ரங்கசாமி ஊக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் 15 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய அளவிலான 5-வது சப் ஜூனியர் குத்துச்சண்டை போட்டி நடந்தது. அதில், பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் கால் இறுதி போட்டி வரை சென்று வெற்றி பெற்றனர். இந்த அணியை சேர்ந்த கிரண்குமார் என்ற வீரர் 52 கிலோ எடை பிரிவில் முதல் சுற்றில் பஞ்சாப் வீரரை வீழ்த்தினார். தொடர்ந்து, கால் இறுதியில் மகாராஷ்டிரா வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, ஹரியானா வீரருடன் வெற்றி பெற்று. அரை இறுதி போட்டிக்கு முன்னேறி வெண்கல பதக்கம் வென்றார். பதக்கம் பெற்ற வீரர் கிரண்குமார், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். முதல்வர், வீரரை பாராட்டி, 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகைக்கான காசோலை வழங்கினார்.
சந்திப்பின்போது , முன்னாள் எம்.எல்.ஏ.க்.,கள் அசோக் ஆனந்த், சிவசங்கர், பொது செயலாளர் கோபு , துணைத் தலைவர் முத்து கேசவலு, பயிற்சியாளர் வசந்தராஜ், மற்றும் பதக்கம் பெற்ற வீரரின் பெற்றோர் உடனிருந்தனர்.
